​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடிநீர் திட்டங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்

Published : Jul 16, 2019 11:53 AM



குடிநீர் திட்டங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்

Jul 16, 2019 11:53 AM

தமிழ்நாட்டில் பல்வேறு குடிநீர் திட்டங்களில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உரிய பராமரிப்பு இல்லாததால் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என தி.மு.க. உறுப்பினர் பெரியக்கருப்பன் தெரிவித்தார்.

அவருக்கு பதில் அளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திலும் கூடுதல் பணியாளர்களை நியமித்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மன்னார்குடி சுற்றுவட்டாரங்களில் மயானங்ளுக்கு செல்ல பாதைகள் இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் செல்லும் நிலை உள்ளதாக தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மயானங்களுக்கு செல்லும் பாதைகளில் சாலைகள் பாலங்கள் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறினார்.