​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரயில் எஞ்சினில் ஒட்டிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

Published : Jul 16, 2019 10:15 AM



ரயில் எஞ்சினில் ஒட்டிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

Jul 16, 2019 10:15 AM

கோவை ரயில் நிலையத்திற்கு வந்த விரைவு ரயிலின் எஞ்சினின் முன்புறம் ஆண் சடலம் ஒன்று ஒட்டியபடி இருந்ததால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

சென்னையில் இருந்து மங்களூர் வரை செல்லும் விரைவு ரயில் நேற்று இரவு கோவை ரயில் நிலையம் வந்தடைந்தது. ரயில் நிலைய நடைமேடையில் வந்தபோது ரயில் என்ஜினில் முன்புறமாக ஆணின் சடலம் எஞ்சினில் ஒட்டி தொங்கியபடி இருந்ததைக் கண்ட பயணிகள் ரயில் ஓட்டுநரிடம் தெரிவித்தனர்.

ரயில் எஞ்சினின் முன்புறம் நின்ற நிலையிலேயே ஒட்டி தொங்கிக்கொண்டிருந்த சடலத்தை மீட்ட ரயில்வே போலீசார், பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், வடகோவை ரயில்நிலையம் அருகே ஒருவர் ரயிலை நோக்கி பாய்ந்தது தெரியவந்தது. உயிரிழந்த நபர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.