​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எந்திரத்தின் உதவியுடன் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்

Published : Jul 15, 2019 9:26 PM

எந்திரத்தின் உதவியுடன் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம்

Jul 15, 2019 9:26 PM

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தேசிய நாள் கொண்டாட்டத்தின் போது ராணுவ வீரர் ஒருவர் தான் உருவாக்கிய எந்திரத்தின் உதவியுடன் வானில் பறந்ததை பார்வையாளர்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.

பிரெஞ்சுப் புரட்சியின் அடையாளமான ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 14 ஆம் தேதி பிரான்சில் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பாரிசில் ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்று இருந்தனர். அப்போது விசித்திரமான காட்சி ஒன்று அரங்கேறியது.

சிறிய ஜெட் எந்திரத்தில் நின்றபடி கருப்பு நிற உடையணிந்த வீரர் ஒருவர் துப்பாக்கியுடன் அந்தரத்தில் பறந்து வட்டமடித்தார். தாங்கள் பார்ப்பது கனவா, நிஜமா என்று பார்வையாளர்கள் நம்ப முடியாமல் இருந்தனர். உற்சாகமாக அந்த காட்சியை அவர்கள் கண்டு ரசித்தனர்.


ராணுவ வீரரான பிரான்கி ஜபாதா ( franky zapata ) தனது பிளைபோர்ட் (( flyboard ))என்ற ஜெட் பவர் எந்திரத்தில் பறந்து புதிய சாகசத்தில் ஈடுபட்டார். இது தொடர்பான வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், நவீனம் மற்றும் புதுமையான தங்களது ராணுவத்தால் பெருமை அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.