​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறையின் புதிய அறிவிப்புகள்

Published : Jul 15, 2019 9:03 PM

கலை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறையின் புதிய அறிவிப்புகள்

Jul 15, 2019 9:03 PM

தமிழகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்டு அகழாழ்வுகள் மேற்கொள்ள 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கலை பண்பாடு மற்றும் தொல்லியல் துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். சென்னை அரசு அருங்காட்சியக காட்சி கூடங்களில் காணொலி காட்சி திரைகள் அமைக்க ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார். சென்னை அரசு அருங்காட்சியகத்தில் பாதுகாப்பு மேலாண்மை கட்டுப்பாட்டு அமைப்புக்காக இரண்டரை கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலம் கலைஞர்கள் மற்றும கலை குழுக்களுக்கு ஆடை மற்றும் அணிகலன்கள் வாங்கிட 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்டும் என்று அறிவித்தார்.

மறைந்த புகழ்பெற்ற கலைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு ஒரு முறை மட்டும் வழங்கப்படும் குடும்ப பராமரிப்பு உதவித் தொகை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.