​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை

Published : Jul 15, 2019 7:06 PM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை

Jul 15, 2019 7:06 PM

திருச்சி மாவட்டம் துவாக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது. துவக்கத்தில் சாரல் மழையாக பெய்ய ஆரம்பித்த மழையானது, நேரம் செல்லச் செல்ல திடீரென கனமழையாக உருவெடுத்தது.
இதையடுத்து மழைநீர் சாலைகளில் வழிந்தோடியது. மழையைத் தொடர்ந்து அப்பகுதியில் குளுகுளு சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. திடீர் மழையால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் கொங்கணாபுரம், செட்டிமாங்குறிச்சி, சங்ககிரி, செட்டிப்பட்டி, தேவூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. மழையால் அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழவடகரை, கும்பக்கரை, சோத்துப்பாறை உள்ளிட்ட இடங்களில் மூன்றாவது நாளாக மழை பெய்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில், மாலையில் ஒரு மணி நேரமாக கனமழை பெய்தது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, கைலாசம்பாளையம், சீதாராம்பாளையம், மண்டக்காபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரமாக மழை பெய்தது.