​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூர்: சேத்தியாத்தோப்பு பால் பதப்படுத்தும் நிலையம் மேம்படுத்தப்படும்

Published : Jul 15, 2019 4:42 PM



கடலூர்: சேத்தியாத்தோப்பு பால் பதப்படுத்தும் நிலையம் மேம்படுத்தப்படும்

Jul 15, 2019 4:42 PM

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பால் பதப்படுத்தும் நிலையத்தில், 1 லட்சம் லிட்டர் அளவிலான பால் பதப்படுத்தும் வகையில் புதிய உபகரணங்கள் பொருத்தப்படும் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய கட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன், ஸ்ரீமுஷ்ணம் பேருந்து நிலையத்தில் ஆவின் பாலகம் அமைக்கப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த பால்வளத்துறை அமைச்சர், அமைக்கப்படும் எனக் கூறினார். மேலும் கடலூர் மாவட்டத்துக்குட்பட்ட சேத்தியாத்தோப்பு பால் பதப்படுத்தும் நிலையத்தில், பழைய உபகரணங்கள் மாற்றப்பட்டு, 1 லட்சம் லிட்டர் அளவிலான பால் பதப்படுத்தும் வகையில் புதிய உபகரணங்கள் பொருத்தப்படும் எனவும், தெரிவித்தார்.

அதே போல் உசிலம்பட்டி தொகுதி உறுப்பினர் நீதிபதி பேசுகையில், தனது தொகுதியிலுள்ள கால்நடை மருந்தகம் கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படுமா என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், உசிலம்பட்டி கால்நடை மருந்தகம் விரைவில் மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார்.