​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்சியர் அலுவலக வளாக கழிவறையில் பெண் குழந்தை மீட்பு

Published : Jul 15, 2019 2:33 PM



ஆட்சியர் அலுவலக வளாக கழிவறையில் பெண் குழந்தை மீட்பு

Jul 15, 2019 2:33 PM

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள கழிவறையில் இருந்து, பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புதிய கழிவறைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் வேளையில், பழைய கழிவறையில் இருந்து குழந்தை அழுகுரல் கேட்டுள்ளது. இதை அடுத்து அங்கு சென்று பார்த்த ஊழியர்கள், பிறந்து சில மணிநேரமே ஆன பெண் குழந்தை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலையத்திற்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பெண் குழந்தையை மீட்டனர். அந்தக் குழந்தையானது திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்தக் குழந்தை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.