​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாஜக எம்.எல்.ஏவின் மகளை காதல் திருமணம் செய்தவர் மீது தாக்குதல்

Published : Jul 15, 2019 2:22 PM



பாஜக எம்.எல்.ஏவின் மகளை காதல் திருமணம் செய்தவர் மீது தாக்குதல்

Jul 15, 2019 2:22 PM

உத்திர பிரதேசத்தில், பாஜக எம்.எல்.ஏவின் மகளை காதல் திருமணம் செய்த நபர், நீதிமன்றத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

அம்மாநில பாஜக எம்.எல்.ஏவான ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்சி மிஸ்ரா, மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரான அஜிதேஷ் குமார் என்பவரை கோயிலில் வைத்து ஜூலை 4ஆம் தேதி காதல் திருமணம் செய்தார். பின்னர், தங்களது காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பெற்றோர் தரப்பு மிரட்டல் விடுவதாக பரபரப்பு வீடியோ ஒன்றையும் சாக்சி மிஸ்ரா வெளியிட்டிருந்தார். இந்நிலையில், காதல் தம்பதியினர் தங்களுக்கு உரிய பாதுகாப்பு கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றம் சென்று, நீதிமன்ற அறைக்குள் நுழைய முற்பட்டுள்ளனர்.

அப்போது திடீரென அவர்களைச் சூழ்ந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அஜிதேஷ் குமார் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும், அஜிதேஷ் குமாரை மட்டுமே அக்கும்பல் குறிவைத்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இவ்விவகாரத்தைக் கண்டித்துள்ள நீதிமன்றம், காதல் தம்பதிக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.