​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
HIV பாதித்த மாணவனை சேர்க்க மறுப்பு - பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க உத்தரவு

Published : Jul 15, 2019 1:46 PM



HIV பாதித்த மாணவனை சேர்க்க மறுப்பு - பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளிக்க உத்தரவு

Jul 15, 2019 1:46 PM

எச்.ஐ.வி. பாதித்த மாணவனுக்கு அரசுப் பள்ளியில் இடமளிக்க மறுத்தது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு பள்ளிக்கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

எச்.ஐ.வி. பாதிப்பை காரணம் காட்டி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவனுக்கு தலைமை ஆசிரியர் அனுமதி மறுத்த விவகாரம் சர்ச்சையாகி உள்ளது.

இதுதொடர்பாக ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் 4 வாரங்களில் விளக்கம் அளித்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.