​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக பொய் பிரச்சாரம் - தமிழிசை

Published : Jul 15, 2019 11:39 AM



தமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பதாக பொய் பிரச்சாரம் - தமிழிசை

Jul 15, 2019 11:39 AM

அஞ்சல் துறை தேர்வுகள் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கர்ம வீரர் காமராஜருக்கு மரியாதை செலுத்துவதில் பா.ஜ.க பெருமை கொள்வதாகவும், தூய்மையான ஊழலற்ற ஆட்சிக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர் காமராஜர் என்றும் கூறினார்.

அதனால் தான் பிரதமர் மோடி ஊழலற்ற சேதத்தை பற்றி பேசும் போது எல்லாம் காமராஜரை முன்னுதாரணமாக கூறுகிறார் என்றும் தமிழிசை தெரிவித்தார்.

தமிழகத்திற்கு எந்த திட்டம் வந்தாலும் அது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் அதை எதிர்ப்பது வாடிக்கையாகி விட்டது என்றும், இனி அதனை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் கூறினார்.