​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஷாம்பு பாட்டிலில் கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த 2 பேர் கைது

Published : Jul 15, 2019 9:00 AM

ஷாம்பு பாட்டிலில் கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த 2 பேர் கைது

Jul 15, 2019 9:00 AM

சென்னை விமான நிலையத்தில் கஞ்சா எண்ணெய் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை வழியாக மாலத்தீவுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஒரு இளம்ஜோடியிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் பெண்ணின் கைப்பையில் இருந்த 4 ஷாம்பு பாட்டில்களை ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பிய போலீசார், இளம்ஜோடியை அறையில் அடைத்து வைத்தனர் ஆய்வு முடிவில் அது கஞ்சா எண்ணெய் என்பதும், ஒரு கிலோ மதிப்புள்ள அந்த எண்ணெய் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்து போதைப் பொருள் தடுப்பு போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.