​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக மழை

Published : Jul 15, 2019 7:53 AM

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பரவலாக மழை

Jul 15, 2019 7:53 AM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியைடந்துள்ளனர்.

ஈரோடு

ஈரோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேக மூட்டத்துடன் வானம் காட்சியளித்து பலத்த காற்று வீசிய நிலையில், ஒருமணிநேரம் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதையடுத்து சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

நீலகிரி

 நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. பகல் வேளைகளில் இரண்டாவது நாளாக தொடரும் இந்த கனமழையானது, வண்டிச்சோலை, வெலிங்டன் உட்பட குன்னூர் தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் பெய்தது.

 நாகை

நாகை, நாகூர், புத்தூர், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரம் மழை பெய்ததால் மக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனர். சில இடங்களில் மழை காரணமாக மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

தருமபுரி, ஈரோடு, நீலகிரி,திருவாரூர், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களிலும், கும்பகோணம், செஞ்சி, வந்தவாசி, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது.