​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மலைப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு

Published : Jul 15, 2019 7:45 AM



மலைப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு

Jul 15, 2019 7:45 AM

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் தேன் எடுக்கச் சென்ற ஆதிவாசி இளைஞர் தவறி விழுந்து இறந்தாகக் கூறப்படுகிறது.

பெள்ளத்தி கொம்பை என்ற மலைவாழ் மக்கள் கிராமத்தை சேர்ந்த காளியப்பன், சந்திரன், ராமன் மற்றும் குண்டன்குனா ஆகியோர் தேன் எடுப்பதற்காக மலையடிவரத்தில் சென்றுள்ளனர். அங்கு தேன் எடுக்க முயன்ற போது குண்டன்குனா கால் தவறி 100 அடி பள்ளத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மற்ற மூவரும் கொலக்கம்பை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் ஊர்மக்கள் 6 கிலோ மீட்டர் தூரம்வரை வரை நடந்து சென்று குண்டன் குனாவின் உடலை மீட்டனர். இதனிடையே உடன் சென்றவர்கள் அவரைக் கொலை செய்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.