​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அஞ்சல் துறை தேர்வுகள் தொடர்பான அறிவிப்பில் தமிழக அரசுக்கு உடன்பாடில்லை

Published : Jul 14, 2019 6:26 PM

அஞ்சல் துறை தேர்வுகள் தொடர்பான அறிவிப்பில் தமிழக அரசுக்கு உடன்பாடில்லை

Jul 14, 2019 6:26 PM

அஞ்சல் துறை தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பில் தமிழக அரசுக்கு உடன்பாடு இல்லை என அமைச்சர் மாஃப பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

நீலகிரியை சேர்ந்த சபிதா போஜன் என்ற எழுத்தாளரின் நீலமலை பூக்காரி எனும் நூல் வெளியீட்டு விழா கோவையிலுள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதில் தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தோடர், படுகர் இன மொழிகளை மீட்டெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக யுனெஸ்கோவிடம் ஒரு மில்லியன் டாலர் நிதி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் கீழடி அகழாய்விற்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என தெரிவித்த அவர், இதுகுறித்து மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும் எனவும் தெரிவித்தார்.