​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிணற்றுக்குள் தவறி விழுந்து தவித்த சிறுத்தையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

Published : Jul 14, 2019 6:11 PM

கிணற்றுக்குள் தவறி விழுந்து தவித்த சிறுத்தையை பத்திரமாக மீட்ட வனத்துறையினர்

Jul 14, 2019 6:11 PM

மஹாராஷ்டிர மாநிலத்தில் கிணற்றுக்குள் விழுந்து தவித்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

பூனே அருகே ஷிரூர் தாலுகாவுக்கு உட்பட்ட பக்தே எனும் கிராமத்திலுள்ள கிணறு ஒன்றில் சிறுத்தை ஒன்று தவறி விழுந்தது. நீருக்குள் விழுந்த சிறுத்தை, அங்கிருந்த கம்பத்தை பற்றியவாறு தவித்துக் கொண்டிருந்தது.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் தகவலளித்ததன் பேரில் விரைந்து வந்த வனத்துறையினர் சிறுத்தையை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கினர்.

கயிறுகள் மூலம் கூண்டை பிணைத்து கிணற்றுக்குள் இறக்கிய மீட்பு குழுவினர், சிறுத்தையை கூண்டுக்குள் செல்ல வைக்க முயன்றனர். இதையடுத்து நீரில் தவித்து கொண்டிருந்த சிறுத்தை, கூண்டுக்குள் சென்றவுடன் அதனை லாவகமாக மூடி, மேலே கொண்டு வந்தனர். பின்னர் சிறுத்தைக்கு சிகிச்சை அளிப்பதற்காக, மாணிக்தோ சிறுத்தைகள் மீட்பு மையத்துக்கு கூண்டுடன் கொண்டு சென்றனர்.