​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராஜ்யசபா உறுப்பினராகும் வைகோவுக்கு மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து

Published : Jul 14, 2019 4:24 PM



ராஜ்யசபா உறுப்பினராகும் வைகோவுக்கு மதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து

Jul 14, 2019 4:24 PM

அஞ்சல் துறை தேர்வுகளை இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்ற அறிவிப்பினால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் மிகவும் பாதிக்கப்படும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபா உறுப்பினராக வரும் 25ஆம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பதவியேற்க உள்ளார். இந்நிலையில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வைகோவை சந்தித்துவாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது வைகோவுக்கு ஒருவர் வெள்ளி வாள் ஒன்றை பரிசளித்தார். அதனை பெற்றுக்கொண்ட வைகோ இந்தி திணிப்பை வெட்ட இந்த வாள் பயன்படட்டும் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, வட இந்தியர்கள் இந்தியில் தான் தேர்வை எழுதுவார்கள் என்றும் பொதுவாக அனைவரும் ஆங்கிலத்திலேயே தேர்வு எழுதலாம் என்றும் கூறினார்.

மேலும் பேசிய அவர், ஏற்கனவே இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இந்திய அரசமைப்பு சட்ட நகலை கொளுத்தினேன், இதனை நாடாளுமன்றத்திலேயே கூறியவன் நான் என்றும் இந்திய அரசமைப்பு சட்ட நகலை இன்றைக்கும் கொளுத்துவேன் என சொல்லுகின்ற துணிச்சல் தனக்கு உண்டு என்றார்.