​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தண்ணீர் பிரச்சனைக்கு மழைநீர் சேகரிப்பு ஒன்றே தீர்வு - கமல்

Published : Jul 14, 2019 4:18 PM



தண்ணீர் பிரச்சனைக்கு மழைநீர் சேகரிப்பு ஒன்றே தீர்வு - கமல்

Jul 14, 2019 4:18 PM

தண்ணீர் பிரச்சனைக்கு மழைநீர் சேகரிப்பு ஒன்றே தீர்வு எனவும், அரசை எதிர்பார்க்காமல் ஒவ்வொருவரும் மழைநீரை சேகரிக்க வேண்டும் எனவும் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள், நடன இயக்குநர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கான தேர்தல், சென்னை தியாகராய நகரில் உள்ள நடன இயக்குநர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் நடன இயக்குநர் ஷோபி பவுல்ராஜ் தலைமையிலான அணியினரும், நடன இயக்குநர் தினேஷ்குமார் தலைமையிலான அணியினரும் போட்டியிடுகின்றனர்.

தேர்தலில் வாக்களிக்க வந்த நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடிகர் சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நியாயமான முறையில் சட்டப்பூர்வமாக நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.