​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை - செங்கோட்டையன்

Published : Jul 14, 2019 3:48 PM



அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை - செங்கோட்டையன்

Jul 14, 2019 3:48 PM

அனைவருக்கும் கல்வி திட்டத்தில், அடுத்தாண்டு முதல் மாற்றம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள சுங்கான்கடை பகுதியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

தனியார் பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்லும் நிலையை மாற்றி, அரசு பள்ளிகளில், முதல்கட்டமாக, இத்திட்டத்தின்கீழ், சுமார் 60 ஆயிரம் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.