​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீன வணிகர்களை நோக்கி நகர்ந்த ஹாங் காங் மக்கள் போராட்டம்

Published : Jul 14, 2019 2:59 PM

சீன வணிகர்களை நோக்கி நகர்ந்த ஹாங் காங் மக்கள் போராட்டம்

Jul 14, 2019 2:59 PM

சீனாவுக்கு எதிராக ஹாங் காங்கில் வெடித்துள்ள மக்கள் போராட்டம், சீன வணிகர்கள் அதிகமுள்ள இடத்தை நோக்கி நகர்ந்தது.

சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் ஒன்றாக இருப்பது ஹாங் காங். அங்கு கைது செய்யப்படும் குற்றம் சாட்டப்பட்டோரை சீனாவுக்கு அழைத்துச் சென்று விசாரிக்கும் சட்டத் திருத்த மசோதாவுக்கு ஹாங் காங் நிர்வாகம் ஒப்புதல் அளிக்கவே மக்கள் போராட்டம் வெடித்தது. போராட்டத்திற்கு பணிந்த அரசு, மசோதாவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

மேலும் மசோதாவின் காலம் முடிந்து விட்டதாகவும் கூறியது. இருப்பினும் நிரந்தரமாக மசோதாவைக் கைவிடவில்லை என்று கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 1997ஆம் ஆண்டில் ஹாங் காங்கை சீனா மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்த போது நடந்த போராட்டத்தைப் போல் எழுச்சியுடன் தற்போது நடந்து வருகிறது.

சீன எல்லை அருகே செங் சுஇ (sheung shui) என்ற இடத்தில் நேற்று நடந்த பேரணி வன்முறையாக மாறிய நிலையில், இன்று சீன வணிகர்கள் அதிமுகள்ள இடமான ஷா டின் (Sha tin) மாவட்டத்தை நோக்கி பேரணி நகர்ந்தது. பல்லாயிரக்கணக்கானோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.