​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரோஹிங்கியா மக்களுக்கு மியான்மரில் இந்தியா சார்பில் வீடுகள்

Published : Jul 14, 2019 11:36 AM



ரோஹிங்கியா மக்களுக்கு மியான்மரில் இந்தியா சார்பில் வீடுகள்

Jul 14, 2019 11:36 AM

மியான்மரில் இருந்து இனப்படுகொலைக்கு தப்பி வெளியேறிய ரோஹிங்கியா மக்கள் தாய்நாடு திரும்பும் போது பயன்படுத்துவதற்காக அந்நாட்டில் இந்தியா 250 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. 

கடந்த 2017ஆம் ஆண்டு மியான்மரில் இருந்து வெளியேறி சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா மக்கள் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். அவர்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்புவதற்கான உதவிகளை செய்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மியான்மருக்கான இந்திய தூதர் சவுரப் குமார், மியான்மரில் இந்தியா சார்பில் கட்டப்பட்ட 250 வீடுகளை ஒப்படைத்துள்ளார். 2017ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது.

தலா 430 சதுரஅடி கொண்ட இந்த pre-fabricated வீடுகள் நிலநடுக்கம், புயல், உள்ளிட்டவற்றை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல, பள்ளிகள், மருத்துவமனைகளையும் கட்டித்தர இந்தியாவிடம் மியான்மர் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக பெரிய அளவில் வன்முறைகள் அரங்கேற்றப்பட்ட மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன. எனினும் ரோஹிங்கியா மக்கள் மீண்டும் எப்போது நாடு திரும்புவார்கள் என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.