​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விம்பிள்டன் அரை இறுதி - மைதானத்தில் அமர்ந்து புத்தகம் படித்த சிறுவன்

Published : Jul 14, 2019 11:18 AM

விம்பிள்டன் அரை இறுதி - மைதானத்தில் அமர்ந்து புத்தகம் படித்த சிறுவன்

Jul 14, 2019 11:18 AM

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில், பெடரரும், நடாலும் மோதிய அரை இறுதிப் போட்டியின் போது, மைதானத்தில் இருந்த சிறுவன், ஆட்டத்தை ரசிக்காமல், புத்தகம் படித்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

டென்னிஸ் உலகின் ஜாம்பவான்களான ரபேல் நடாலும், ரோஜர் பெடரரும் விம்பிள்டன் அரை இறுதியில் மோதினர். வெள்ளிக்கிழமை அன்று விறுவிறுப்பு குறையாமல் நடந்த இப்போட்டியில் பெடரர் வெற்றி பெற்றார்.

மிகச் சிறந்த ஆட்டமாக வர்ணிக்கப்படும் இப்போட்டியின் போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவரும் பரபரப்பின் உச்சத்தில் இருக்க, சிறுவன் ஒருவனோ, எந்த பதற்றமும் இல்லாமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தான்.

இந்தக் காட்சியானது, இணையதளத்தில் வெளியாகி பல தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.