​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜஸ்பிரிட் பும்ரா போல பந்துவீச முயற்சிக்கும் மூதாட்டி

Published : Jul 14, 2019 11:03 AM



ஜஸ்பிரிட் பும்ரா போல பந்துவீச முயற்சிக்கும் மூதாட்டி

Jul 14, 2019 11:03 AM

தன்னைப் போலவே பந்துவீச முயற்சிக்கும் மூதாட்டியின் வீடியோ, இந்திய கிரிக்கெட் வீரர் ஜஸ்பிரிட் பும்ராவை ஈர்த்துள்ளது.

ஐ.சி.சி. தரவரிசைப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ள வீரரான ஜஸ்பிரீட் பும்ராவின் பந்துவீச்சு பாணி வித்தியாசமானது. அவரது பந்துவீச்சு பாணியை இளைஞர்கள் பின்பற்றுவது வழக்கமான ஒன்று தான்.

ஆனால் மூதாட்டி ஒருவர் பும்ரா போல பந்துவீச முயற்சிக்கும் வீடியோ, இணையதளத்தில் வெளியாகி வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது.

அந்த வீடியோ ஜஸ்பிரீட் பும்ராவின் கவனத்திற்குச் செல்லவே, அதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்த வீடியோ, தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டதாக ஸ்மைலி மூலம் பும்ரா குறிப்பிட்டுள்ளார்.

image