​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏடிஎம் வாகனத்தில் பணத்தைக் கொள்ளையடித்த வங்கி ஊழியர்

Published : Jul 14, 2019 7:49 AM

ஏடிஎம் வாகனத்தில் பணத்தைக் கொள்ளையடித்த வங்கி ஊழியர்

Jul 14, 2019 7:49 AM

நடமாடும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து சுமார் 9 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டு வாகனத்தையும் எரித்து தடயத்தை அழிக்க முயற்சித்த கூட்டுறவு வங்கியின் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஈரோடு பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஏடிஎம் பேருந்தில் இருந்து கரும்புகை வருவதைக் கண்ட பொதுமக்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.

அதிகாரிகள் சோதனை நடத்தியதில் 9 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மாயமானது கண்டுபிடிக்கப்பட்டது. சரவணன் என்ற வங்கி ஊழியர் பெட்ரோல் ஊற்றி வாகனத்தை எரிக்க முயன்றதையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்தனர். இதையடுத்து சரவணனை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.