​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை

Published : Jul 13, 2019 8:48 PM



தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை

Jul 13, 2019 8:48 PM

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் கடுமையாக வெயில் வாட்டி வதைத்துவந்தது. இந்நிலையில் சாரல் மழையாக ஆரம்பித்த மழையானது சுமார் அரைமணி நேரம் கன மழையாக கொட்டித் தீர்த்தது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இடி, மின்னலுடன்கூடிய கனமழை பெய்தது. மேட்டுப்பாளையம், சிறுமுகை,காரமடை உள்ளிட்ட பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து கடுமையான இடி மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

நீலகிரி மாவட்டம் உதகை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் வேளைகளில் விட்டுவிட்டு இதமான மழை பெய்துவந்தது. இந்நிலையில் குன்னூர், வண்டிச்சோலை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. மழையால் சாலையில் மழை நீர் கரைபுரண்டு ஓடியது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் கனமழை பெய்தது. இப்பகுதியில் கடும் வறட்சி வாட்டிவந்த நிலையில், ஆவுடையார்கோயில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை கொட்டித் தீர்த்தது.

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக திண்டுக்கல்லில் அவ்வப்போது சாரல் மழை பெய்துவந்தது. இந்நிலையில் கோவிலூர், முத்தனம்பட்டி, கோபால்பட்டி, உள்ளிட பகுதிகளில் பலத்த மழைபெய்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மற்றும் சுற்றுவட்டாரத்தில் சூறைக் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இப்பகுதியில் கடுமையான வெயில் வாட்டிவந்த நிலையில், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம் மண்டப சாலை , கானாவிளக்கு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. கடந்த சில மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது.