​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
9,10,11,12ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும் - செங்கோட்டையன்

Published : Jul 13, 2019 12:56 PM



9,10,11,12ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும் - செங்கோட்டையன்

Jul 13, 2019 12:56 PM

செப்டம்பர் 15க்குள்ளாக 9,10,11,12ஆம் வகுப்புகள் கணினிமயமாக்கப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை அம்பத்தூரில் உள்ள காமராஜர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசின் விலையில்லா மடிகணினி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவின் போது மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், இதுவரை 54 லட்சத்து 62 ஆயிரம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

3 ஆண்டு அவகாசம் இருந்த போதும், இரண்டே ஆண்டில் புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.