​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் பவானி சாகருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published : Jul 13, 2019 10:55 AM



நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் பவானி சாகருக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Jul 13, 2019 10:55 AM

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.image

நீர்பிடிப்பு பகுதிகளான, நீலகிரி மற்றும் வடகேரளாவில் பரவலாக மழை பெய்து வருவதால், நேற்று காலை அணைக்கு நீர்வரத்து, வினாடிக்கு 992 கனஅடியாக இருந்த நிலையில் இன்று காலை, வினாடிக்கு ஆயிரத்து 964 கனஅடியாக அதிகரித்துள்ளது.

இதனால் மொத்தம் 105 அடி உயரம் கொண்ட அனையின் நீர்மட்டம், நேற்று 58 புள்ளி 50 ஆக இருந்த நிலையில், இன்று காலை 59 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 6 புள்ளி 9 டிஎம்சி யாகும்.

அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக, பவானி ஆற்றில் விநாடிக்கு 200 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 5 கன அடி நீர் என மொத்தம் வினாடிக்கு 205 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.