​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திர சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரையின்போது அமளி - ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசம்

Published : Jul 12, 2019 11:35 AM



ஆந்திர சட்டப்பேரவையில் முதலமைச்சர் உரையின்போது அமளி - ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசம்

Jul 12, 2019 11:35 AM

ஆந்திர சட்டப்பேரவையில் பேசிக் கொண்டிருந்த போது தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் குறுக்கிட்டதால் அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசம் ஆனார்.

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் பற்றி தவறான தகவல்களை அளித்ததாகக் கூறி, முதலமைச்சர் மீது தெலுங்குதேசம் கட்சியினர் உரிமை மீறல் தீர்மானம் கொடுத்தனர். தவறான தகவல்களை அளித்ததை நிரூபித்துவிட்டால், ஜெகன்மோகன் ரெட்டி பதவி விலகத் தயாரா என்றும் சந்திரபாபு நாயுடு சவால் விடுத்தார்.

பின்னர் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பேசத் தொடங்கியபோது, தெலுங்குதேசம் கட்சி உறுப்பினர்கள் குறுக்கிட்டதால், அமளி உருவானது. முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெலுங்குதேசம் எம்எல்ஏக்களை நோக்கி ஆவேசமாக பேசியதால் பரபரப்பு நிலவியது-