​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவர் ஆன இந்திராணி முகர்ஜி

Published : Jul 11, 2019 6:22 PM



ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவர் ஆன இந்திராணி முகர்ஜி

Jul 11, 2019 6:22 PM

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், அப்ரூவர் ஆகியுள்ள இந்திராணி முகர்ஜி, டெல்லி நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

கடந்த 2007ஆம் ஆண்டில், ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடாக 305 கோடி ரூபாய் பெறுவதற்காக, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி பெறுவதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கில், அப்ரூவர் ஆகி விளக்கம் அளிக்க விரும்புவதாக ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இணை நிறுவனர் இந்திராணி முகர்ஜி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதற்கு கடந்த வாரம் டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில், மகள் ஷீனா போரா கொலை வழக்கில் மும்பையில் உள்ள பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணி முகர்ஜி, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.