​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எட்டு வழிச் சாலை சேலம் வழியாக செல்கிறதே தவிர சேலத்திற்காக மட்டுமே அமைக்கப்படுவதில்லை

Published : Jul 11, 2019 6:14 PM



எட்டு வழிச் சாலை சேலம் வழியாக செல்கிறதே தவிர சேலத்திற்காக மட்டுமே அமைக்கப்படுவதில்லை

Jul 11, 2019 6:14 PM

சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பாக எந்தவொரு பணியும் நடக்கவில்லை என்றும், இது மத்திய அரசின் திட்டம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

நெல்லையில் நடைபெறும் அதிமுக நிர்வாகி இல்ல நிர்வாகிகள் திருமணத்துக்கு செல்வதற்காக, மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், சேலம் எட்டு வழிச் சாலையால் பயண நேரம் குறையும் என்றும், எரிபொருள் மிச்சமாகும் எனவும் தெரிவித்தார்.

வாகனங்கள் அதிகரித்து விட்டதால், அதற்கு ஏற்றார்போல் சாலை அமைப்பது அரசின் கடமை என்றும், விபத்துக்களை தடுப்பதற்காகவும், மத்திய அரசின் ராணுவ தடவாள தயாரிப்பு தொழிற்சாலைகள் அமையவும் எட்டு வழிச் சாலை பயனுள்ளதாக இருக்கும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.