​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

Published : Jul 11, 2019 2:19 PM

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி

Jul 11, 2019 2:19 PM

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

சென்னை பெசன்ட் நகரில் நடந்த பேரணியில் காயிதே மில்லத், எத்திராஜ் கல்லூரி, மாநில கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் சிசு இறப்பு விகிதங்கள் குறைந்துள்ளதாகவும், உலக சுகாதார நிறுவனத்தின் இலக்கை தமிழகம் முன்னதாகவே எட்டியுள்ளதாகவும் கூறினார்.

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் வெளிமாநிலத்தவர்கள் விண்ணபிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்,  தமிழக மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டு வருவதாகவும் இதைத் தாண்டி போலி சான்றிதழ் சமர்பித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவ இடம் ரத்து செய்யப்படும் என்றும் கூறினார்.