​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை விமான நிலையத்திற்கு நோட்டீஸ்

Published : Jul 10, 2019 8:54 PM

சென்னை விமான நிலையத்திற்கு நோட்டீஸ்

Jul 10, 2019 8:54 PM

சென்னை விமான நிலையம் போக்குவரத்திற்கு பாதுகாப்பற்றதாக உள்ளதாக விளக்கம் அளிக்குமாறு உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 

சென்னை மற்றும் அகமதாபாத் விமான நிலையங்களில் விமான போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் சென்னை விமான நிலைய விமான ஓடுபாதைக்கு அருகில் உள்ள கழிவு நீரோடைகள் திறந்து இருப்பதும், கட்டுமான பணிக்கு பயன்படுத்திய செங்கற்கள், மணல் மற்றும் பொருட்கள் ஓடுபாதை ஓரங்களில் கிடப்பதும் தெரியவந்த து. மேலும் விமான டயர்களில் இருந்து தேய்ந்து விழும், ரப்பர் துண்டுகளை கிடப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தின் என்ஜினை இயக்கும் போது, ரப்பர் துண்டுகள் காற்றின் வேகத்தில் உள் இழுக்கப்பட்டால் பெரும் விபத்து ஏற்படும் என்றும், ஓடுபாதைக்கு அருகில் கிடக்கும் பொருட்கள் சக்கரத்தில் சிக்கினால், விமானம் சறுக்கி விபத்து நேரிடும் என்றும் குழுவின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து விளக்கம் அளிக்குமாறு சென்னை விமான நிலையத்திற்கு உள்நாட்டு விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விமான ஓடுபாதை வழுக்கல் நிறைந்து உள்ளதாகவும் அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சென்னை விமான நிலைய இயக்குநர் ஸ்ரீகுமார்,வாரந்தோறும் ரப்பர்கள் நீக்கப்படுகின்றன என்றார்.விரைவில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.