​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடக பிரச்சினையை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளி

Published : Jul 10, 2019 4:37 PM



கர்நாடக பிரச்சினையை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் அமளி

Jul 10, 2019 4:37 PM

கர்நாடக அரசியல் குழப்பத்திற்கு பாஜகவே காரணம் எனக் குற்றம்சாட்டி, நாடாளுமன்றத்தில் இருஅவைகளிலும், காங்கிரஸ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு பதில் அளிக்கவில்லை எனக்கூறி, மக்களவையிலிருந்து காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்புச் செய்தனர். கர்நாடகாவில், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா அரசுக்கு எதிராக 13 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இதனால், கர்நாடக அரசியலில் உச்சக்கட்ட குழப்பம் நீடிக்கிறது. மக்களவை கூடியதும், கர்நாடக அரசியல் குழப்பத்திற்கு மத்திய அரசு உரிய பதில் அளிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் கோரி முழக்கமிட்டனர். ஆனால், மத்திய அரசு சார்பில், எந்த விளக்கமும் அளிக்கப்படாததால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் எம்.பிக்கள்., மக்களவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

இதே பிரச்சினையைக் எழுப்பி, மாநிலங்களவையிலும் காங்கிரஸ் எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். 11 மணிக்கு அவை தொடங்கியதும், நேரமில்லா நேரத்தில் கர்நாடக அரசியல் குழப்பம் குறித்து பேச அனுமதிக்குமாறு, காங்கிரஸ் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

ஆனால், அனுமதி வழங்கப்படவில்லை. இதனால், தொடர்ந்து முழக்கமிட்டத்தால், பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும், அமளி நீடித்ததால், பிற்பகல் 2 மணி வரையிலும், அதனைத் தொடர்ந்து, 3 மணி வரையிலும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.