​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார் திமுகவின் என்.ஆர்.இளங்கோ

Published : Jul 10, 2019 12:42 PM



வேட்புமனுவைத் திரும்பப் பெற்றார் திமுகவின் என்.ஆர்.இளங்கோ

Jul 10, 2019 12:42 PM

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 3ஆவது நபராக வேட்புமனுத் தாக்கல் செய்த என்.ஆர்.இளங்கோ, தமது மனுவை திரும்பப் பெற்றார்.

தேசத்துரோக வழக்கில் தீர்ப்பு வெளியாகி வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படவே, அவர் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட சிக்கல் ஏற்படக் கூடும் என்று கருதப்பட்டது.

இதை அடுத்து திமுக சார்பில் மூன்றாவது வேட்பாளராக என்.ஆர்.இளங்கோ வேட்புமனுத்தாக்கல் செய்தார். தாம் தேர்தலில் நிற்க முடியாமல் போகும் பட்சத்தில் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கூறியதே தாம் தான் என்று வைகோ விளக்கம் அளித்தார். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது வைகோவின் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக திமுகவின் என்.ஆர்.இளங்கோ தமது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். சட்டப்பேரவைச் செயலகம் சென்ற அவர், தேர்தல் நடத்தும் அலுவலரான செயலரைச் சந்தித்து மனுவை திரும்பப் பெற்றுக் கொண்டார்.