​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குழாய்களை அகற்றுவதற்கான திட்டத்தை முதலமைச்சர் அறிவிக்க உள்ளார் - SP வேலுமணி

Published : Jul 10, 2019 12:05 PM

பல ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குழாய்களை அகற்றுவதற்கான திட்டத்தை முதலமைச்சர் அறிவிக்க உள்ளார் - SP வேலுமணி

Jul 10, 2019 12:05 PM

பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்களை அகற்றுவதற்கான திட்டத்தை முதலமைச்சர் அறிவிக்க உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஒட்டன்சத்திரத்தில் 30 ஆண்டுகளுக்கு  முன் பதிக்கப்பட்ட குழாய்கள் சேதமடைந்து குடிநீர் வீணாவதாகவும், இதற்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கவும் தி.மு.க. கொறடா சக்கரபாணி கோரினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் வேலுமணி, பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடைந்து நீர் வீணாவதாக பல இடங்களில் இருந்தும் புகார்கள் வருவதாகத் தெரிவித்தார்.

இது முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், பல ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குழாய்களை அகற்றுவதற்கான புதிய திட்டத்தை முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறினார்.