​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு

Published : Jul 09, 2019 6:20 PM

நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு

Jul 09, 2019 6:20 PM

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டக் குழுவினர் நீர் மேலாண்மை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் 2வது நாளான செவ்வாய்கிழமை திருச்செங்கோடு மாணிக்கம்பாளையம் அருகே அண்ணா நகர், லத்துவாடி ஆகிய இடங்களில் இக்குழுவின் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக, மாவட்ட அளவிலான நீர்நிலை மேலாண்மை குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் மாணிக்கம்பாளையத்தில் நடைபெற்றது.

ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான வெண்ணந்தூர். நாமகிரிபேட்டை. புதுப்பாளையம். முள்ளூக்குறிச்சி. பட்டணம்.புதுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்டக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 

பரமத்திவேலூர் தாலுகாவிற்குட்பட்ட பரமத்தி, வீரணம்பாளையம, கபிலர்மலை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை பார்வையிட்டனர். 

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி ஏரியை பார்வையிட ஜல்சக்தி அபியான் திட்டக்குழு அதிகாரிகளுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் வந்திருந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் குடிநீர் கேட்டு அவர்களை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் கொண்டுவர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், அதிகாரிகள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர். 

சேலம் மாவட்டம் ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுகா பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். கஞ்சநாய்க்கன்பட்டி மற்றும் குண்டுக்கல் ஏரிகளை ஆய்வு செய்த அதிகாரிகளிடம் தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கும் நீர்நிலைகளை மீட்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் ஜல்சக்தி அபியான் திட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அணையின் நீர் இருப்பு, நீர் வரத்து, கீழ்பவானி கால்வாய் தண்ணீர் திறப்பு குறித்து கேட்டறிந்தனர். தண்ணீர் பற்றாக்குறையுள்ள கிராமங்கள் நிலத்தடித் நீர் குறைவான விவசாயப் பகுதிகளை பார்வையிட்டு நீர் மேலாண்மை குறித்து அறிவுரை வழங்கினர்.