​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மும்பையில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை

Published : Jul 09, 2019 6:09 PM

மும்பையில் மீண்டும் வெளுத்து வாங்கும் கனமழை

Jul 09, 2019 6:09 PM

மும்பையில் கடந்த வாரம் பெய்த கனமழையின் தாக்கத்திலிருந்து மீண்டு வருவதற்குள், மீண்டும் கனமழை வெளுத்து வாங்குகிறது. 

மும்பையில் கடந்த வாரம் 5 நாட்கள் இடைவிடாமல் பெய்த கனமழைக்கு, 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். படிப்படியாக இயல்புநிலை திரும்பிக் கொண்டிருந்த வேளையில், செவ்வாய்கிழமை மீண்டும் மும்பையில் கனமழை கொட்டி தீர்க்க தொடங்கியது.

பல இடங்களிலும் மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக மாறியது. சாலைகளில் போக்குவரத்து முடங்கியதோடு, விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கனமழை தொடர்ந்து பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் மட்டும் 3 மணி நேரத்தில் 108 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இதனிடையே அடுத்த 24 மணி நேரத்திற்கு, கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பிருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.