​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்டோ ஓட்டுனரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கிய காவல் ஆணையாளர்

Published : Jul 09, 2019 4:56 PM

ஆட்டோ ஓட்டுனரை நேரில் அழைத்து வெகுமதி வழங்கிய காவல் ஆணையாளர்

Jul 09, 2019 4:56 PM

சென்னையில் 15 சவரன் நகையுடன், பெண் தவற விட்ட கைப்பையை, போலீசில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை, காவல் ஆணையாளர் பாராட்டி பரிசளித்தார்.

பொன்னியம்மன் மேடு பகுதியைச்சேர்ந்த நர்மதா என்ற பெண், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தனது வீட்டுக்கு ஆட்டோவில் சென்றபோது 15 சவரன் தங்க நகை, மற்றும் பான் கார்டு, ஆதார் கார்டு, ரூபாய் 500 ரொக்கம் ஆகியவற்றுடன் கைப்பையை ஆட்டோவில் மறந்து விட்டு விட்டார்.

இதுபற்றி அவர் போலீசில் புகார் செய்த நிலையில், ஆவடியைச்சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முருகேசன், சவாரி முடிந்து வீடு திரும்புகையில் தனது ஆட்டோவின் பின் இருக்கைக்கு பின்னால், கைப்பை இருப்பதை பார்த்து மாதவரம் போலீசில் ஒப்படைத்தார்.

இதையடுத்து நர்மதா தனது கைப்பையை சரிபார்த்து பெற்றுக்கொண்டார். இதற்கிடையே காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் ஆட்டோ ஓட்டுனர் முருகேசனை நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.