​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200சதவீத வரி

Published : Jul 08, 2019 9:46 PM

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200சதவீத வரி

Jul 08, 2019 9:46 PM

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு 200 சதவிகித சுங்கவரி விதிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேறியது.

புல்வாமா தாக்குதலை அடுத்து வர்த்தகத்திற்கு உகந்த நாடு என்று பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட அந்தஸ்தை இந்திய அரசு திரும்ப பெற்றது. மேலும் அந்த நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 சதவிகித சுங்க வரி விதிக்க மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது.

இந்த முடிவுக்கு ஒப்புதல் கோரி மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் தாக்கல் செய்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதனால் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களான பழங்கள், ஜிப்சம், கந்தகம், பதனிடப்பட்ட தோல், தாதுக்கள், தாது எண்ணெய்,சிமெண்ட் ஆகியவற்றுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவுடனான பாகிஸ்தானின் வர்த்தகம் பாதிக்கப்படும்.