​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேதமடைந்த சாலைகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்

Published : Jul 08, 2019 6:34 PM

சேதமடைந்த சாலைகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்

Jul 08, 2019 6:34 PM

பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இதர மாநகராட்சி, நகராட்சிகளில் சேதமடைந்த சாலைகள் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சிதுறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் வேலுமணி வெளியிட்டார். பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் அபிவிருத்தி திட்டப்பணிகள் செயல்படுத்தியதாலும், இயற்கை இடர்பாடுகளாலும் சேதமடைந்த சாலைகள் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்கப்படும் என்று அறிவித்தார்.

சென்னை மாநகருக்கு 1 டிஎம்சி தண்ணீர் கிடைப்பதற்கு ஏதுவாக சென்னையில் உள்ள 114 நீர்நிலைகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும் என்று அறிவித்தார்.

நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு ஏதுவாக பெருநகர சென்னை மாநகராட்சியில் சுமார் 2000 இடங்களில் 12 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் மழை நீர் சேகரிக்கும் கிணறுகள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஊரகப்பகுதிகளில் 146 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 700 குறு பாலங்கள், 250 சிறு பாலங்கள் மற்றும் 100 தரைப்பாலங்கள் கட்டப்படும் என்றும் அமைச்சர் வேலுமணி அறிவித்தார்.