​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க முடியாது

Published : Jul 08, 2019 3:51 PM

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதிக்க முடியாது

Jul 08, 2019 3:51 PM

நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை தற்போது எண்ணுவதற்கு அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறி விட்டது.

நடிகர் சங்க தேர்தலை நிறுத்தி சங்கங்களின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கு திங்கள் கிழமை அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் சங்க உறுப்பினர்கள் 10 பேர் தங்களையும் வழக்கில் இணைக்க கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

இதுதொடர்பாக நடிகர் சங்கம் 12ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். அப்போது, நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ண அனுமதி அளிக்க கோரி நடிகர் விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதி ஆதிகேசவலு, வழக்கு நிலுவையில் உள்ளதால், வாக்கு எண்ணிக்கைக்கு தற்போது அனுமதி அளிக்க முடியாது என தெரிவித்து விட்டார்.

இதனிடையே தங்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டதாக பெஞ்சமின் உட்பட 3 நடிகர்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆதிகேசவலு, இது தொடர்பாக உரிமையியல் வழக்கு தான் தொடர முடியும் என்றார்.

இதை அடுத்து 3 பேரும் தங்களின் மனுக்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டதால், வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.