​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்களின் சேவை குறைப்பு, பயணிகள் கடும் அவதி

Published : Jul 07, 2019 6:32 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்களின் சேவை குறைப்பு, பயணிகள் கடும் அவதி

Jul 07, 2019 6:32 PM

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்களின் சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரெயில்களின் சேவை குறைக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் கோடம்பாக்கம் வரை மட்டுமே செல்லும் என்றும், அங்கிருந்து வேறு ரயிலில் தாம்பரம் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. காலை முதல் ரயில்களின் சேவை குறைக்கப்பட்டதால் உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் கடும் அவதி அடைந்தனர். பல மணி நேரம் ரயில்கள் காலதாமதாக இயக்கப்பட்டதாலும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.