​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆரணியில் அமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில் 110 சவரன் தங்க நகைகள் கொள்ளை

Published : Apr 20, 2018 12:10 PM

ஆரணியில் அமைச்சர் பங்கேற்ற திருமண விழாவில் 110 சவரன் தங்க நகைகள் கொள்ளை

Apr 20, 2018 12:10 PM

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் அதிமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில், 110 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிமுக மேற்கு ஆரணி ஒன்றிய செயலாளர் வேலு என்பவரின் மகள் திருமணம் நேற்று நடைபெற்றது.

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சென்றார். இந்நிலையில், மண்டபத்தில் மணமகன் உறவினர்கள் தங்கிய அறையில் இருந்து 110 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டதை அறிந்து, திருமண வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். ஜன்னல் வழியாக பூட்டியிருந்த அறையில் நுழைந்த மர்ம நபர் கைவரிசையை காட்டியது தெரியவந்தது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஆரணி காவல்துறையினர், சிசிடிவியில் பதிவான சந்தேகத்திற்குரிய நபரை தேடி வருகின்றனர்.