​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் இன்று முதல் புதிய தமிழ்ப்படங்கள் வெளியாகின்றன - நிறுத்தப்பட்டிருந்த திரைப்படப் படப்பிடிப்புகளும் தொடங்குகின்றன

Published : Apr 20, 2018 12:01 PM

தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால் இன்று முதல் புதிய தமிழ்ப்படங்கள் வெளியாகின்றன - நிறுத்தப்பட்டிருந்த திரைப்படப் படப்பிடிப்புகளும் தொடங்குகின்றன

Apr 20, 2018 12:01 PM

கடந்த 49 நாட்களாக நீடித்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததையடுத்து இன்று முதல் புதிய தமிழ்ப்படங்கள் வெளியாகின்றன. நிறுத்தப்பட்டிருந்த திரைப்படப் படப்பிடிப்புகளும் இன்று முதல் தொடங்குகின்றன.

டிஜிட்டல் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் கடந்த மார்ச் முதல் தேதியில் இருந்து புதிய தமிழ்த் திரைப்படங்களை வெளியிட மறுத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பல திரையரங்குகளில் மாற்று மொழிப் படங்களையும் பழைய படங்களையும் திரையிடும் நிலைமை ஏற்பட்டது. இடையில் திரையரங்குகளும் கேளிக்கை வரியை குறைக்க கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து மார்ச் 16ம் தேதிக்குப் பின்னர் திரையரங்குகள் வெறிச்சோடின. இந்நிலையில் தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, அரசின் உறுதிமொழியை ஏற்று ஒரு வாரத்தில் வேலை நிறுத்தத்தை திரையரங்கு உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

ஆனால் தயாரிப்பாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தால், புதிய படங்கள் வெளியாகாத நிலை நீடித்தது. இதையடுத்து தமிழக அரசுடன் கடந்த 17ம் தேதி 8 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு உடன்பாடு எட்டப்பட்டது. இதனால் 20ம் தேதி முதல் புதிய படங்கள் வெளியாகும் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்தார். இந்நிலையில் இன்று கார்த்திக் சுப்புராஜின் மெர்க்குரி உள்ளிட்ட புதிய தமிழ்ப்படங்கள் இன்று வெளியாகின்றன.

image

ரஜினியின் காலா ஏப்ரல் 27ம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகுமா என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதே போன்று கமல்ஹாசனும் தமது விஸ்வரூபம் 2 படத்தின் டிரைலரை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.