​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகேந்திர சிங் தோனிக்கு புகழாரம் சூட்டியிருக்கும் ICC

Published : Jul 06, 2019 6:58 PM

மகேந்திர சிங் தோனிக்கு புகழாரம் சூட்டியிருக்கும் ICC

Jul 06, 2019 6:58 PM

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி, ஞாயிறன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், அவரை பெருமைப்படுத்தும் விதமாக வீடியோ பதிவு ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான மகேந்திர சிங் தோனி, ஜூலை 7 ஆம் தேதி தனது 38ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார்.

இந்நிலையில் தோனியை கெளரவிக்கும் விதமாக,  அவர் படைத்த சாதனைகள் மற்றும் அவரது கிரிக்கெட் பயணத்தின் சுவாரஸ்ய நிகழ்வுகள் உள்ளிட்டவை அடங்கிய வீடியோ தொகுப்பை ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கேப்டன் கோலி உள்ளிட்ட வீரர்கள் தோனி குறித்து பேசும் உரைகளும் அதில் இடம்பெற்றுள்ளன.