​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலைக்கவசம் அணியாமல் வந்த வழக்கறிஞருக்கு அபராதம்

Published : Jul 06, 2019 5:53 PM

தலைக்கவசம் அணியாமல் வந்த வழக்கறிஞருக்கு அபராதம்

Jul 06, 2019 5:53 PM

சென்னை சைதாப்பேட்டையில் தலைக்கவசம் அணியாமல் வந்ததுடன், போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்ட வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சைதாப்பேட்டை தாடண்டர் நகர் சிக்னல் அருகே வெள்ளிக்கிழமை அன்று போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கினர். அப்போது, போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், தாம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருப்பதாகவும், அவசரமாக செல்ல வேண்டும் என்றும் கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

வாகனப் பதிவெண்ணை வைத்து விசாரணை செய்த போலீசார், அவர் மேற்கு கே.கே.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் அரிகிருஷ்ணன் என்பதைக் கண்டுபிடித்தனர். தலைக்கவசம் அணியாத குற்றத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 600 ரூபாய் அபராதத்திற்கான ரசீதும் தபால் மூலம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.