​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் நவீன கடல் மீன் உணவகம் - அமைச்சர் ஜெயகுமார் தகவல்

Published : Jul 05, 2019 8:19 PM

சென்னையில் நவீன கடல் மீன் உணவகம் - அமைச்சர் ஜெயகுமார் தகவல்

Jul 05, 2019 8:19 PM

மீன் உணவின் பயன்கள் மற்றும் அதன் பல்வேறு வகைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 50 லட்சம் ரூபாய் செலவில் சென்னையில் மீன் உணவு திருவிழா நடத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் துறை சார்ந்த 42 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில், நாகை மாவட்டம் செருதூர், இராமநாதபுரம் மாவட்டம் ஆற்றங்கரை , கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் ஆகிய இடங்களில் 8 கோடி ரூபாய் மதிப்பில் முகத்துவாரம் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் கடலரிப்பினை தடுத்திட 1 கோடியே 87 லட்ச ரூபாய் செலவில் கடலரிப்பு தடுப்பு சுவர் அமைக்கப்படும் என்றும், கடலோர மீன் வளத்தை அதிகரிக்க திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் 30 இடங்களில் 10 கோடி ரூபாய் செலவில் செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பண்ணைக் குட்டைகளில் மேம்படுத்தப்பட்ட திலேபியா மீன் வளர்ப்பினை ஊக்குவிக்க 87.2 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், உள்நாட்டு மீன் உற்பத்தியை பெருக்கிட 28 லட்சம் கொண்டை மீன் மற்றும் நன்னீர் இறால் குஞ்சுகள் வளர்க்கப்படும் என்றும். சென்னையில் 50லட்ச ரூபாய் செலவில் ஒரு நவீன கடல் மீன் உணவகம், மற்றும் இரண்டு நவீன மீன் விற்பனை நிலையம் அமைக்கப்படும் எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் மீன் விற்பனைக்கு புதிய மொபைல் ஆப் உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் கூறினார்.