​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க உளவு விமானத்தை இடைமறித்து விரட்டியதோம் - ரஷ்யா

Published : Jul 05, 2019 7:12 PM

அமெரிக்க உளவு விமானத்தை இடைமறித்து விரட்டியதோம் - ரஷ்யா

Jul 05, 2019 7:12 PM

கருங்கடலில் அமெரிக்க உளவு விமானத்தை இடைமறித்து விரட்டியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்க நேட்டோ படை கடல் தென்றல் என்ற பெயரில் கடற்படை ஒத்திகையை கருங்கடலில் நிகழ்த்தி வருகிறது. இதற்கு போட்டியாக ரஷ்யாவும் போர் பயிற்சி ஒத்திகையை அதே பகுதியில் நிகழ்த்தி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் பி 8 ஏ பொசெய்டன் ((P-8A Poseidon )) என்ற உளவு விமானத்தை ரஷ்ய பகுதியை நோக்கி இயக்கியதாகவும் அதனை ரஷ்யாவில் சுகோய் சு 27 ((Sukhoi Su-27)) போர் விமானம் மூலம் இடை மறித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

சற்று தூரம் வரை அதனை விரட்டிச் சென்று பின்னரே திரும்பியதாகவும் கூறியுள்ளது. இதேபோல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 26 அந்நிய விமானங்கள் தங்களது வான்பரப்புக்கு அருகே பறந்ததாகவும் ரஷ்யா சுட்டிக்காட்டியுள்ளது.