​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்ரோ ரயில் நிலையங்களில் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டம் தொடக்கம்

Published : Jul 05, 2019 8:41 AM



மெட்ரோ ரயில் நிலையங்களில் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டம் தொடக்கம்

Jul 05, 2019 8:41 AM

சென்னை கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை வளாகத்தில் 1.2 மெகாவட் சூரிய சக்தி மின் உற்பத்தியை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகன நிறுத்தங்களுக்கான கட்டணத்தை பயண அட்டை மூலம் வசூலிக்கும் திட்டத்தையும் துவக்கி வைத்தார். முன்னதாக பேசிய அவர், சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்துவதால் ஆண்டுக்கு ஒருகோடியே 60 லட்சம் ரூபாய் மிச்சமாகிறது என்றார்.

உலக முதலீட்டார்கள் மாநாட்டில் போடப்பட்ட 304 புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், 10 நிறுவனங்கள் தற்போது தொழில் தொடங்கியுள்ளதாகவும், 4 புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதல்வர் நேற்று கையெழுத்திட்டார் என்றும் அவர் கூறினார். இவற்றின் மூலம் 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.