ஐ.என்.எக்ஸ் பணப்பரிமாற்ற முறைகேடு வழக்கில் அப்ரூவரானார் இந்திராணி
Published : Jul 05, 2019 7:56 AM
ஐஎன்.எக்ஸ் மீடியா தொடர்பான முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாற இந்திராணிக்கு சிறப்பு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
தம்மை இந்த வழக்கில் இருந்து மன்னித்து விடுவிக்குமாறு கோரி இந்திராணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குற்றவாளிகளை அடையாளம் காட்டி வழக்கின் விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்று நீதிமன்றம் இந்திராணியின் வாக்குமூலத்தை சீல் வைத்த உறையில் மூடி தாக்கல் செய்ய அனுமதியளித்துள்ளது.
இவ்வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்ப்பட்டுள்ள நிலையில், இந்திராணியின் வாக்குமூலம் இருவருக்கும் கடுமையான சிக்கலை உருவாக்கக்கூடும்.
தற்போது மும்பை பைகுலா சிறையில் தமது கணவர் பீட்டர் முகர்ஜியாவுடன் கொலை வழக்கில் இந்திராணி அடைக்கப்பட்டுள்ளார். ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் மீதும் அந்நிய முதலீட்டு விவகாரத்தால் வழக்கு பதிவாகியுள்ளது.