​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெட் ஏர்வேஸ் நிதி முறைகேடு -விசாரணைக்கு உத்தரவு

Published : Jul 05, 2019 7:07 AM

ஜெட் ஏர்வேஸ் நிதி முறைகேடு -விசாரணைக்கு உத்தரவு

Jul 05, 2019 7:07 AM

ஜெட் ஏர்வேஸ் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் விவகாரத்தில் விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது இந்தியாவின் முன்னணி தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமாக விளங்கியது ஜெட் ஏர்வேஸ்.

நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்நிறுவனம் தனது சேவையை நிறுத்திக் கொண்டது. இந்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. ஆனாலும் இதுவரை யாருடைய பெயரும் குற்றச்சாட்டில் இடம் பெறவில்லை.

இதனிடையே ஜெட் ஏர்வேசின் நிறுவனர் நரேஷ் கோயல் கடந்த மே மாத்தில் தமது மனைவி அனிதாவுடன் வெளிநாடு செல்ல முயன்ற போது மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கோயல் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வெளிநாடு செல்ல அனுமதி கோரப்பட்டுள்ளது.